சாவகச்சேரியில் பட்ட மரம் முறிந்து விழுந்ததில் வீதியால் பயணித்த இளைஞன் பலி!
Thursday, December 1st, 2016
சாவகச்சேரி சங்கத்தானைப் பிரதேசத்தில் இன்று வியாழக்கிழமை(01) காலை வீதியால் மோட்டார்ச் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த இளைஞரொருவர் மீது தேக்குமரம் சரிந்து விழுந்ததில் மோட்டார்ச் சைக்கிளில் பயணித்த இளைஞன் சம்பவ இடத்திலேயே பலியானார்.
கடுமையான காற்று வீசியதுடன் மழையும் பெய்து கொண்டிருந்த இன்று காலை சாவகச்சேரி சங்கத்தானைப் பிரதேசத்தின் ஊடாக பூநகரிப் பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி நிலையம் நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போதே பட்டுப் போயிருந்த தேக்கு மரம் வீதியில் முறிந்து விழுந்ததில் சச்சிதானந்தம் கஜந்தன் (சகி) என்ற மேற்படி இளைஞன் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த இளைஞரின் சடலம் சாவகச்சேரி வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைகளுக்காக வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் சாவகச்சேரிப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.


Related posts:
பொதுத் தேர்தல் தொடர்பில் ஜனாதிபதி வெளியிட்டுள்ள முக்கிய செய்தி!
நவராத்திரி தினத்தை முன்னிட்டு இந்து சமய விழுமியங்களை ஊக்குவிக்கும் முகமாக 40 ஆலயங்களுக்கு தலா 50 ஆயி...
வடக்கில் மேலும் 30 வயதுக்கு மேற்பட்ட 2 இலட்சம் பேருக்கு தடுப்பூசி வழங்கவேண்டியுள்ளது – வடக்கு மாகாண ...
|
|
|


