ஆம்புலன்ஸ் வழங்கலில் வடக்கு புறக்கணிப்பு – வடக்கில் 7 அரச MP க்கள் இருந்தும் மௌனம்!

Tuesday, August 26th, 2025


அதிநவீன தொழில்நுட்ப வசதிகளை கொண்ட 20 அம்புலன்ஸ்கள் நேற்றையதினம்
அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸவின் தலைமையில்
அரசாங்க வைத்தியசாலைகளுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளன. 

சுகாதாரத்துறையின் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதி உதவியுடன், நாட்டில் மத்திய அரச மற்றும் மாகாண சபைகளின் கட்டுப்பாட்டில் உள்ள தெரிவுசெய்யப்பட்ட வைத்தியசாலைகளுக்கு வழங்கிவைக்கப்பட்டுள்ளன.

ஆனாலும் வடக்கு மாகாணத்தின் வைத்தியசாலைகள் இந்த வழங்கலில் முற்றாக தவிர்க்கப்பட்டுள்ளது சமூக ஆர்வலர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

ஒவ்வொரு ஆம்புலன்ஸ் வண்டியின் மதிப்பு ரூ. 25.7 மில்லியனுக்கும் அதிகமாகும்.

இந்தப் புதிய ஆம்புலன்ஸ்கள் பல அதிநவீன வசதிகளைக் கொண்டுள்ளன, மேலும் நோயாளியை வேறொரு வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும்போது பல்வேறு சிகிச்சைகளை வழங்க முடியும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

இதேநேரம் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட நிலையில் கடந்தகால அரசுகள் மருத்துவ வளங்களை கொடுத்திருந்தாலும் அதிகரித்து வரும் தேவை கருதியதாக இன்னமும் முழுமையான வழங்கள் கிடைக்காது நாளாந்தம் ஆம்புலன்ஸ் உள்ளிட்ட பல்வேறு இடர்பாடுகளுடன்  வடக்கு மாகாண வைத்தியசாலைகள் இயங்கி வருகின்றன.

ஆனாலும் இந்த 20 அதிநவீன ஆம்புலன்ஸ் வண்டிகள் எம்பிலிப்பிட்டிய, நாவலப்பிட்டிய, மாத்தளை, நீர்கொழும்பு, திருகோணமலை, நுவரெலியா, சிலாபம், மொனராகலை, தம்புள்ளை, ஹொரணை ஆகிய பத்து மாவட்ட பொது மருத்துவமனைகள், பொலன்னறுவை, மட்டக்களப்பு, பதுளை, அனுராதபுரம் ஆகிய நான்கு போதனா வைத்தியசாலைகள், பொத்துவில், கந்தளாய், அக்கரைப்பற்று, தெஹியத்தகண்டிய ஆகிய நான்கு அடிப்படை மருத்துவமனைகள், அம்பாறை பொது மருத்துவமனை மற்றும் சிகிரியா மருத்துவமனை ஆகிய இடங்களுக்கு விநியோகிக்கப்பட்டன.

அனுர அரசில் வடக்கில் குதிப்பாக வன்னி தேர்தல் மாவட்டத்தில் இருந்து 2 நாடாளுமன்ற உறுப்பினர்களும், யாழ்ப்பாணம் கிளிநொச்சி தேர்தல் மாவட்டத்தில் இருந்து 3 நாடாளுமன்ற உறுப்பினர்களும் மேலதிகமாக இரு தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர்களுமாக 7 பேர் இருக்கும் நிலையில்   குறித்த ஆம்புலன்ஸ்களில் ஒரு சிலவற்றையவது வடக்கின் வைத்தியசாலைகளுக்கு வழங்கியிருக்கலாம். அவர்களும் பொம்மைகளாகவே இருப்பதாக தெரிகின்றது.

இதேநேரம்  அரசு அதை மேற்கொள்ளாது வடக்கை பூரணமாக நிராகரித்தமை திட்டமிட்ட செயலா அல்லது வேறேதும் காரணமா என்பது புரியாத ஒன்றாகவே இருக்கின்றது.

இதேநேரம் மத்திய அரசு மற்றும் மாகாண சபையின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள வைத்தியசாலை அமைப்புக்குத் தேவையான ஆம்புலன்ஸ் வண்டிகள் வரும் காலங்களில் கட்டம் கட்டமாக வழங்கப்படும், இதற்காக மத்திய அரசிடமிருந்தும், சுகாதார மேம்பாட்டுக்காக ஒதுக்கப்பட்ட சிறப்புத் திட்டங்களிடமிருந்தும், வெளிநாடுகளிடமிருந்தும் ஆதரவைப் பெற முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்று சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
000



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106