அரச வைத்தியர்களின் போராட்டம் ஆரம்பம்!
Wednesday, November 30th, 2016
நாடளாவியரீதியில் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் தீர்மானித்துள்ளது.
இதன்படி இன்று (30) காலை 8 மணி முதல் 24 மணிநேரத்திற்கு அடையாள வேலைநிறுத்தப் போராட்டம் தொடரும் என குறிப்பிடப்பட்டுள்ளது.அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் விசேட மத்திய குழு கூட்டம் இன்று காலை நடைபெற்றது. இதன்போதே குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
2017ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்துக்கு எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் டாக்டர் சமந்த ஆனந்த தெரிவித்துள்ளார்.

Related posts:
சீனாவின் போட் சிட்டியில் இந்தியாவும் முதலீடு!
எதிர்வரும் காலங்களில் கடுமையான பயணக்கட்டுப்பாடு அமுல்படுத்தப்படும் - இராணுவ தளபதி எச்சரிக்கை!
நல்லதோர் எதிர்காலத்தின் ஆரம்ப நாளாக தீபாவளித் திருநாள் அமையட்டும் – வாழ்த்துச் செய்தியில் பிரதமர் தெ...
|
|
|


