உகாண்டாவில் மோதல்: 55 பேர் பலி!
Monday, November 28th, 2016
உகாண்டாவின் மேற்குப் பகுதியில் தனி மாநிலம் உருவாக்கக் கோரி போராடிவரும் புதிய ஆயுதக்குழுவினருக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே நடைபெற்ற மோதலில் சுமார் 55 பேர் கொல்லப்பட்டிருப்பதாக போலிசார் தெரிவித்துள்ளனர்.!
வன்முறையைத் தூண்டியதாகக் கூறி உள்ளூர் பழங்குடியின அரசர் சார்லஸ் வெஸ்லே மும்பரேவை போலிசார் கைது செய்துள்ளார். ஆனால் தான் சம்பந்தப்பட்டிருப்பதாகக் கூறப்படுவதை அவர் மறுத்துள்ளார்.
காங்கோ ஜனநாயகக் குடியரசுடனான எல்லைப்பகுதிக்கு அருகே இருக்கும் கசசி நகரில் உள்ள அரச மாளிகையில் தாக்குதல் நடத்திய பல போராளிகளை கைது செய்தததாக போலிசார் தெரிவித்துள்ளனர். உகாண்டா அரசாங்கம் மற்றும் அந்த பிராந்தியத்தின் பெரிய டோரோ ராஜ்ஜியத்துடன் இந்த சின்ன இராஜ்ஜியமானது பதற்றம் நிறைந்த நீண்ட வரலாற்றை கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related posts:
ஜப்பானில் நிலநடுக்கம்!
ரஷ்யாவில் பாரிய நிலநடுக்கம்!
கனடா - இந்தியா மோதல் - கனடாவுக்கு ஆதரவு வழங்க தயங்கும் அமெரிக்கா உள்ளிட்ட நேச நாடுகள்!
|
|
|


