T-20 உலக கோப்பையை கொண்டாடும் கூகுள்!

Tuesday, March 8th, 2016

பதினாறு அணிகள் பங்கேற்கும் 6ஆவது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் ஏப்ரல் 3அம் திகதி வரை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடக்கிறது.

முதல் சுற்று, சூப்பர்-10 சுற்று என்று இரண்டு வகையாக இந்த போட்டிகள் நடைபெறுகிறது.இணையத்தின் பிரபல தேடுப்பொறியாக (சர்ச் என்ஜின்) விளங்கும் கூகுள், இந்த போட்டியை வரவேற்கும் வகையில் சிறப்பு முகப்புப் பக்கத்தை உருவாக்கியுள்ளது.

வட்டங்கள், முக்கோணங்கள், சதுரங்கள் மற்றும் செவ்வகங்களால் ஆன விளையாட்டு மைதானத்தின் பின்னணியில் இரு அணியைச் சேர்ந்த வீரர்கள் கிரிக்கெட் விளையாடுவதைப்போல் காட்சியளிக்கும் இந்த ‘டூடுள்’ தோற்றத்தில் மிக எளிமையாக காணப்பட்டாலும், டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி தொடர்பாக கிரிக்கெட் ரசிகர்களிடம் உள்ள ஆர்வத்தை தூண்டும் வகையில் அமைந்துள்ளது.

இந்த டூடுளை கிளிக் செய்தால் டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி தொடர்பான அதிகாரபூர்வ இணையதளத்துக்குள் செல்லும் வகையில் இணைப்பும் தரப்பட்டுள்ளது.



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106