மாலபே தனியார் மருத்துவக் கல்லூரிக்கு எதிராக பேராதனை மாணவர்கள் போராட்டம்!
Friday, November 25th, 2016
மாலபே தனியார் மருத்துவக் கல்லூரியை தடை செய்யக் கோரி அரசாங்கத்தை வலியுறுத்தி பேராதனை பல்கலைக்கழக மாணவர்கள் இன்று எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
பேராதனை கலஹ சந்தியில் இந்த எதிர்ப்பு நடவடிக்கை இடம்பெற்றதாக அத தெரண செய்தியாளர் கூறினார். மாலபே தனியார் மருத்துவக் கல்லூரியை தடை செய்ய வலியுறுத்தி பேராதனை பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீட மாணவர்கள் ஆரம்பித்த சத்தியாக்கிரக போராட்டம் 300 வது நாளாகவும் தொடர்ந்து இடம்பெற்று வருவதாக பேராதனை பல்கலைக்கழக மாணவர் சங்கத்தின் தலைவர் மங்கள மத்துமகே தெரிவித்தார். எவ்வாறாயினும் பொறுப்புக் கூற வேண்டிய அதிகாரிகள் எவரும் இந்த விடயம் தொடர்பில் அவதானம் செலுத்தியில்லை என்று அவர் கூறினார்.
மாலபே தனியார் மருத்துவக் கல்லூரியை சட்டபூர்வமானதாக ஆக்குவதற்கு அரசாங்கத்தில் உள்ள அமைச்சர்கள் பாரிய முயற்சிகளை முன்னெடுத்துக் கொண்டிருப்பதாக பேராதனை பல்கலைக்கழக மாணவர் சங்கத்தின் தலைவர் மங்கள மத்துமகே தெரிவித்தார்.

|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106