ஊழல் மோசடி: 350 சிறைக்காவலர் நியமனம் இடைநிறுத்தம் !
Friday, November 25th, 2016
சிறைச்சாலைகள் திணைக்களத்தினால் சிறைச்சாலைகளுக்கென புதிதாக நியமிக்கப்படவிருந்த 350 சிறைக்காவலர்களுக்கான நியமனத்தை தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு சிறைச்சாலைகள், மீள்குடியேற்றம், புனர்வாழ்வு மற்றும் இந்துமத விவகாரங்கள் அமைச்சர் டீ.எம்.சுவாமிநாதன் தீர்மானித்துள்ளார்.
சிறைக்காவலர்களுக்கான நேர்முகப்பரீட்சையின் போது ஊழல், இலஞ்சம், மோசடிகள் இடம்பெற்றுள்ளதாக கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளுக்கமையவே இந்தத் தீர்மானத்தை மேற்கொண்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த முறைப்பாடுகள் தொடர்பாக முறையான விசாரணைகளை நடத்தி யாரேனும் அதிகாரிகள் மோசடியில் ஈடுபட்டிருந்தால் அந்த அதிகாரிகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும் மீண்டும் 2ஆவது தடவையாக முறையாக நேர்முகப்பரீட்சைகளை நடத்தி அந்த நியமனங்களை வழங்க நடவடிக்கையெடுக்கப்படுமென சிறைச்சாலைகள், மீள்குடியேற்றம், புனாவாழ்வு மற்றும் இந்துமத விவகாரங்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.

|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106