சுனாமி எச்சரிக்கை தளர்த்தப்பட்டது!
Wednesday, November 23rd, 2016
நியூசிலாந்தில் சக்தி வாய்ந்த நில அதிர்வு ஏற்பட்டு ஒரு வாரம் கடந்துள்ள நிலையில் மீ்ண்டும் 6.3 ரிக்டர் அளவில் நில அதிர்வு உணரப்பட்டுள்ளது.
Palmerston இன் வடக்குப் பகுதியிலிருந்து 140 கிலோமீட்டர் தொலைவிலும் 37 கிலோமீட்டர் ஆழத்திலும் இந்த நில அதிர்வு மையம் கொண்டுள்ளதாக அந்த நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த நில அதிர்வினால் சேதங்கள் ஏதேனும் ஏற்பட்டுள்ளதா என்பது தொடர்பான தகவல்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை
இதேவேளை, ஜப்பானில் ஏற்பட்ட நில அதிர்வின் பின்னர் விடுக்கப்பட்டிருந்த சுனாமி எச்சரிக்கை தளர்த்தப்பட்டுள்ளது. இருப்பினும் மக்களை அவதானமாக இருக்குமாறு அரசாங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

Related posts:
இந்தியாவிற்கு செல்கிறார் சுவிஸ் ஜனாதிபதி!
உக்ரைனுக்கு மேலும் 300 மில்லியன் டொலருக்கு இராணுவ நிதி உதவி - அமெரிக்கா அறிவிப்பு!
இடைநீக்கம் செய்யப்பட்ட ஜனாதிபதி யூன் சுக் இயோலுக்கு தென் கொரிய நீதிமன்றம் பிடியாணை!
|
|
|


