விசர் நாய்க்கடிக்கு சிகிச்சை பெறத் தவறியவர் உயிரிழப்பு!
Tuesday, November 22nd, 2016
கடந்த 5 மாதங்களுக்கு முன்னர் விசர்நாய்க் கடிக்கு உள்ளான நிலையில், உரிய மருத்துவ சிகிச்சைப் பெறத்தவறிய முதியவர் நேற்று முன்தினம் இரவு பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக யாழ்.போதனா வைத்தியசாலை தகவல்கள் தெரிவித்தன. இச் சம்பவத்தில் அரியாலை யாழ்ப்பாணம் பகுதியைச் சேர்ந்த சின்னதுரை சிறி அன்பழகன் வயது (64) என்ற 4 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்தவராவார்.
கடந்த 5 மாதங்களுக்கு முன்னர் மேற்படி முதியவர் வீதியால் நடந்து வந்த சமயம் குறித்த முதியவரை தெருவில் அலைந்து திரிந்த விசர்நாய் ஒன்று கடித்துள்ளது. எனினும் குறித்த நபர் அதனைப் பொருட்படுத்தாமல் உரிய மருத்துவ சிகிச்சை பெறத் தவறியுள்ளார். இந் நிலையில் நேற்று முன்தினம் காலை திடீர் நெஞ்சுவலியால் அவதிப்பட்ட முதியவருக்கு யாழ்.போதனா வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்று சிகிச்சை வழங்கப்பட்டது. எனினும் அவர் இரவு சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்துள்ளார். இறப்பு விசாரணைகளை யாழ்.போதனா வைத்தியசாலையின் திடீர் இறப்பு விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார். விசர்நாய்க் கடித்ததினால் ஏற்பட்ட நோய்தொற்றே மேற்படி முதியவர் உயிரிழக்க காரணம் என வைத்திய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106