மின் கட்டணம் எரிபொருள் விலை தொடர்பாக விலைப் பொறிமுறைமை!

Sunday, April 10th, 2016
மின் கட்டணம் மற்றும் எரிபொருள் விலை தொடர்பில் விலைப் பொறிமுறைமை ஒன்றைஅறிமுகம் செய்யுமாறு சர்வதேச நாணய நிதியம் அரசுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.

மின் கட்டணம் மற்றும் எரிபொருள் விலை நிர்ணயத்தின் போது அவற்றின் உற்பத்திச் செலவுகளை ஈடுசெய்யும் வகையில் விலைப் பொறிமுறைமை உருவாக்கப்பட வேண்டுமென தெரிவித்துள்ளது.

சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு 150 கோடி அமெரிக்க டொலர் கடன் வழங்க உள்ளது.இது தொடர்பில் கடந்த வாரம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டிருந்தது. சர்வதேச நாணய நிதியத்தின் ஏற்றுக் கொள்ளப்பட்ட நியதிகளுக்கு அமைய சக்திவள விலை நிர்ணயம் தொடர்பில் அரசு தலையீடு செய்யாது சந்தையின் கேள்வி நிரம்பல்பற்றிய காரணிகளின் அடிப்படையில் நிர்ணயிக்கப்பட வேண்டுமென தெரிவித்துள்ளது.

இதன்படி காலத்திற்கு காலம் உலக சந்தையில் எரிபொருள் விலை ஏற்ற இறக்கத்திற்கு அமைய எரிபொருளின் சில்லறை விலை நிர்ணயிக்கப்பட வேண்டுமென தெரிவித்துள்ளது. மின்சாரக் கட்டணங்களுக்கும் கால மாற்றத்திற்கு ஏற்ற வகையில் விலைநிர்ணயிக்கப்பட வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.

கடந்த காலங்களில் எரிபொருள் மற்றும் மின்சாரக் கட்டணங்களுக்காக விலைநிர்ணயிக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. எனினும், அந்த நடைமுறை இதுவரையில் அமுல்படுத்தப்படவில்லை என்பதுகுறிப்பிடத்தக்கது



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106