கல்வியியற் கல்லூரிகளுக்கான நேர்முகப் பரீட்சை மாத இறுதியில்!
Friday, November 18th, 2016
கல்வியியற் கல்லூரிகளுக்கு புதிய மாணவர்களை இணைத்துக் கொள்வதற்கான நேர்முகப் பரீட்சை இம்மாத இறுதியில் நடைபெறவுள்ளது.
மாணவர்கள் ஜனவரி மாதம் கல்லூரிகளில் இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர் என்று கல்வி அமைச்சின், ஆசிரியர் கல்விக்குப் பொறுப்பான ஆணையாளர் கே.எம்.எச்.பண்டார தெரிவித்துள்ளார். 50 சதவீதமான மாணவர்கள் திறமை அடிப்படையிலும் ஏனைய 50 வீதமானோர் பிரதேச செயலாளர் மட்ட ரீதியிலும் தெரிவு செய்யப்படவிருக்கின்றனர் என அவர் மேலும் தெரிவித்துள்ளனர். 30ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர். இவர்களிலிருந்து 4065 பேர் கல்வியியற் கல்லூரிகளுக்கு இணைத்துக் கொள்ளப்படவிருக்கின்றனர் எனவும் ஆணையாளர் தெரிவித்தார். கூடுதலானோர் ஆரம்பக் கல்விப் பயிற்சிக்காக சேர்த்துக் கொள்ளப்படவிருக்கின்றனர் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106