மரக்கறி செய்கையில் ஆர்வம் காட்டும் விவசாயிகள்!

Thursday, November 17th, 2016

வலிகாமம் பகுதியில் பெரும்போக மரக்கறிப் பயிர்ச் செய்கையில் விவசாயிகள் அதிக ஆர்வம் காட்டி வருவதை அவதானிக்க முடிகின்றது.

குறிப்பாக ஏழாலை, குப்பிளான், புன்னாலைக் கட்டுவன், ஈவினை, குரும்பசிட்டி, தெல்லிப்பழை, அளவெட்டி, மல்லாகம், சுன்னாகம், ஊரெழு, உரும்பிராய், அச்செழு, இணுவில், கோண்டாவில், நீர்வேலி, இருபாலை, சிறுப்பிட்டி, கோப்பாய் ஆகிய இடங்களில் மரக்கறி பயிர்ச்செய்கை பாரியளவில் மேற்கொள்ளப்படுகின்றது.

இவ்விடங்களில் பச்சைமிளகாய், கோவா, கரட், பீற்ரூட், தக்காளி போன்ற பயிர்கள் பல ஏக்கர் நிலப் பகுதிகளில் பயிரிடப்பட்டுள்ளதுடன் பல நூற்றுக் கணக்கான ஏக்கர் நிலப் பகுதியில் பயிர்ச் செய்கைக்கான முன் ஆயத்த நடவடிக்கைகளில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளதையும் அவதானிக்க முடிகிறது.

இதேவேளை, வெளியிடங்களிலிருந்து விவசாயத்துக்குத் தேவையான பசளைகளைக் கொள்வனவு செய்வதிலும், நிலத்தைப் பண்படுத்துவத்திலும் பெரும்பாலான விவசாயிகள்  மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். இம்முறை பருவ மழை உரிய காலப் பகுதியில் கிடைக்காமையினால் விவசாய நடவடிக்கைகளில் கால தாமதம் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

இதேவேளை, வழமை போன்று இவ்வருடமும் வலிகாமம் பகுதியில் ஏக்கர் கணக்கில் உருளைக்கிழங்குப் பயிர்ச் செய்கை இடம்பெறவுள்ளது. உருளைக்கிழங்குச் செய்கைக்குத் தேவையான விதை உருளைக்கிழங்கு விநியோகம் கடந்த திங்கட்கிழமை யாழ். மாவட்டத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

625.0.560.320.160.600.053.800.668.160.90



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106