பொறுப்பேற்கப்படாதுள்ள வாகன இலக்கத்தகடுகள்!

Wednesday, November 16th, 2016

யாழ்.மாவட்ட மோட்டார் வாகனப் போக்குவரத்துக் கிளையில் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான வாகன இலக்கத் தகடுகள் இன்றுவரை உரிமையாளர்களால் பொறுப்பேற்கப்படாமல் உள்ளன.

உரிமையாளர்களால் பொறுப்பேற்கப்படாதுள்ள வாகன இலக்கத் தகடுகளில் 2015.12.31 ஆம் திகதிக்கு முன்னர் கிடைக்கப்பெற்ற வாகன இலக்கத் தகடுகள் யாவும் மோட்டார் வாகனப் போக்குவரத்து திணைக்கள தலமை அலுவலகத்திற்கு திருப்பி அனுப்பப்படவுள்ளன.

எனவே வாகன இலக்கத் தகடிற்கு விண்;ணப்பித்து இதுவரை குறித்த வாகன இலககத் தகட்டினை பெற்றுக் கொள்ளாத வாகன உரிமையாளர்கள் 2016.11.23 ஆம் திகதிக்கு முன்னர் யாழ்.மாவட்ட மோட்டார் வாகனப் போக்குவரத்துக் கிளையில் தமது வாகனப் புத்தகம், தேசிய அடையாள அட்டை மற்றும் வாகனத்தின் பழைய இலக்கத் தகடுகள் என்பவற்றைச் சமர்ப்பித்து தமது வாகனங்களின் இலக்கத் தகடுகளைப் பெற்றுக்கொள்ளுமாறு கோரப்படுகின்றனர்.

திருப்பி அனுப்பப்படவுள்ள வாகன இலக்கத்தகடகளின் பட்டியலை யாழ்.மாவட்ட மோட்டார் வாகனப் போக்குவரத்து திணைக்கள கட்டடத்திலுள்ள விளம்பரப் பலகையில் பார்வையிட முடியம் என மோட்டார் வாகனப் போக்குவரத்து திணைக்கள பிரதி ஆணையாளர் அறிவித்துள்ளார்.

imagescaqtz74d



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106