ஹன்டர் மோதியதில் அதிபருக்கு காயம்!
Wednesday, November 16th, 2016
சட்டவிரோதமான முறையில் மணல் ஏற்றி வந்த ஹன்டர் வாகனம் மோதியதில் பாடசாலை அதிபர் ஒருவர் பலத்த காயங்களுக்கு உள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளளார்.
நேற்று செவ்வாய்க்கிழமை (15) காலை 7.30 மணியளவில் புலோலி – கொடிகாமம் வீதியில் உள்ள முள்ளிப் பகுதியில் இடம்பெற்ற இவ் விபத்தில் குடமியன் அ.த.க பாடசாலை அதிபரான அத்தியடி பருத்தித்துறையைச் சேர்ந்த மயில்வாகனம் லினாஸ்குமார் (வயது 39) என்பவரே காலில் பலத்த முறிவு ஏற்பட்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பருத்தித்துறையில் இருந்து மோட்டார் சைக்கிளில் பாடசாலை நோக்கி சென்று கொண்டிருந்த அதிபரை ஹன்டர் மோதிவிட்டு தப்பிச் சென்றதாக பொலிஸார் தெரிவித்தனர். இதில் படுகாயமடைந்த அவர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.

|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106