அவுஸ்திரேலியாவை துடைத்தெறிந்தது தென்ஆப்பிரிக்கா!
Tuesday, November 15th, 2016
அவுஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் தென்ஆப்பிரிக்கா அணி இன்னிங்ஸ் மற்றும் 80 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.
அவுஸ்திரேலியா- தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதிய 2வது டெஸ்ட் போட்டி ஹோபர்ட்டில் நடந்தது.
இதில் அவுஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 85 ஓட்டங்களில் சுருண்டது.இதைத் தொடர்ந்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய தென்ஆப்பிரிக்க அணி 326 ஓட்டங்கள் குவித்தது.பின்னர் 241 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில் 2வது இன்னிங்சை விளையாடிய அவுஸ்திரேலியா நிதான ஆட்டத்தை தொடங்கியது.
நேற்றைய 3வது நாள் ஆட்டத்தின் முடிவில் அந்த அணி 2 விக்கெட் இழப்புக்கு 121 ஓட்டங்கள் எடுத்திருந்தது. குவாஜா (56), அணித்தலைவர் ஸ்மித் (18) ஆட்டமிழக்காமல் இருந்தனர்.இந்நிலையில் இன்று 4வது நாள் ஆட்டம் நடந்தது. தொடர்ந்து விளையாடிய அவுஸ்திரேலியா தென் ஆப்பிரிக்க அணியின் தாக்குதல் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 60.1 ஓவர்களில் 161 ஓட்டங்களுக்கு சுருண்டது.
இதனால் தென்ஆப்பிரிக்கா அணி இன்னிங்ஸ் மற்றும் 80 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.அவுஸ்திரேலிய அணி சார்பில் குவாஜா அதிக பட்சமாக 64 ஓட்டங்கள் எடுத்தார்.
தென் ஆப்பிரிக்க அணியில் அபோட் 6 விக்கெட் கைப்பற்றினார். அதேபோல் ரபடா 4 விக்கெட்டுகள் கைப்பற்றினார்.இந்த வெற்றி மூலம் தென் ஆப்பிரிக்கா 3 டெஸ்ட் கொண்ட தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி உள்ளது.

|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106