ஈழமக்கள் ஜனநாயக கட்சியினால் நல்லூர் பிரதேசத்தில் வாழ்வாதார உதவிகள் வழங்கிவைப்பு!
Tuesday, November 15th, 2016
நல்லூர் பிரதேசத்திற்குட்பட்ட பகுதியில் வாழும் வறிய விவசாயிகளுக்கு விவசாய உள்ளீட்டு பொருட்கள் மற்றும் சுயதொழிலுக்கான வாழ்வாதார உதவிப்பொருட்கள் ஈழமக்கள் ஜனநாயக கட்சியினால் வழங்கிவைக்கப்பட்டுள்ளன.
ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் வடக்கு மாகாணசபை நிதி ஒதுக்கீட்டின் மூலம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு நல்லூர் பிரதேச நிர்வாக செயலாளர் அம்பலம் இரவீந்திரதாசனால் இன்றையதினம் குறித்த பயனாளிகளுக்கு உதவிகள் வழங்கிவைக்கப்பட்டன.
கட்சியின் நல்லூர் பிரதேச அலுவலகத்தில் இன்றையதினம் (15) நடைபெற்ற நிகழ்வில் குறித்த விவசாயிகளுக்கு விவசாய உள்ளீட்டு பொருட்கள் மற்றும் சுயதொழில் வாழ்வாதார உதவிக்கான ஆடு மற்றும் சமையல் உபகரணங்கள் போன்றன வழங்கிவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


Related posts:
வேலையில்லா பட்டதாரிகள் மீது கண்ணீர்ப்புகை தாக்குதல்!
மக்கள் பிரதிநிதிகள் இல்லாமல் உள்ளூராட்சி சபைகள் இயங்குவதை ஏற்றுக்கொள்ள முடியாது - தேர்தல்கள் ஆணைக்கு...
பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து விபத்து - 36 பேர் காயம்!
|
|
|


