மின்னல் தாக்கி குடும்பஸ்தர் மரணம்!
Tuesday, November 15th, 2016
மல்லாவி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட திருநகர் கிராமத்தில் வசிக்கும் குடும்பஸ்தர் ஒருவர் தனது வயலில் வேலை செய்து கொண்டிருந்த போது திடீரென ஏற்பட்ட இடி மின்னரல் தாக்கத்தினால் சம்பவ இடத்தில் மரணமாகியுள்ளார்.
அத்துடன் பிரஸ்தாப நபருடன் வயல் வேலையில் ஈடுபட்டிருந்த மற்றைய நபர் இடி மின்னல் தாக்கத்திற்குட்பட்ட நிலையில் மல்லாவி வைத்தியசாலையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச் சம்பவம் நேற்று முற்பகல் 10 மணிக்கு நடைபெற்றுள்ளது. இதன்போது கிளிநொச்சி திருநகர் யோகபுரத்தில் வசிக்கின்ற இரண்டு பிள்ளைகளின் தந்தையான தம்பி முத்து ஞானேஸ்வரன் (வயது-62) என்ற குடும்பஸ்தரே மரணமடைந்தவராவார்.
இது தொடர்பில் தெரியவருவதாவது,
வவுனிக்குளம் நீர்பாசனத் திட்டத்தில் உள்ள தனது வயலில் உதவியாளர் ஒருவருடன் இணைந்து வேலையில் ஈடுபட்டிருந்த சமயம் திடீரென இடி, மின்னல் தாக்கியுள்ளது. இச் சம்பவத்தின் போது உதவியாளராக வளர்நகர் யோகபுரத்தைக் சேர்ந்த செல்லையா வசந்தகுமார் (வயது-52) என்ற குடும்பஸ்தர் படுகாயமடைந்த நிலையில் மேற்படி வைத்தியாசலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். மரணமடைந்தவரின் சடலம் மல்லாவி ஆதார வைத்தியசாலையின் பிரேத அறையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் மல்லாவி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106