நாளை வடக்கு – கிழக்கு பகுதிகளில் கடும் மழை பெய்ய வாய்ப்பு!
Tuesday, November 15th, 2016
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் நாளை தொடக்கம் இடியுடன் கூடிய மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக காலநிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது.
அவதான நிலையம் விடுத்துள்ள ஊடக அறிக்கை ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனை தவிர மேல், சப்ரகமுவ, மத்தய ஊவா மற்றும் தெற்கு மாகாணங்களிலும் மழை எதிர்பார்க்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மழையுடனான காலநிலையின் போது கடுங்காற்றும் இடைக்கிடையில் இடிமின்னலும் ஏற்படும் எனவும் இது குறித்து பொதுமக்கள் அவதானத்துடன் இருக்குமாறு எச்சரிக்கப்பட்டுள்ளனர்.

Related posts:
தொடரும் சீரற்ற வானிலை - வடக்கிலும் மரக்கறிகளின் விலை அதிகரிப்பு!
வெளிநாடுகளுக்கு அனுப்பப்படும் வீட்டுப் பணிப்பெண்களின் ஆகக்குறைந்த வயதெல்லையில் திருத்தம்!
இன்றும் இடியுடன் கூடிய மழை - வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறல்!
|
|
|


