யாழ்.போதனா வைத்தியசாலை நீரிழிவுச் சிகிச்சை நிலையத்தின் ஏற்பாட்டில் விழிப்புணர்வு நடை பயணம்!
Tuesday, November 15th, 2016
யாழ்.போதனா வைத்தியசாலை நீரிழிவுச் சிகிச்சை நிலையத்தின் ஏற்பாட்டில் விழிப்புணர்வு நடை பயணம் நேற்று (14) காலை-07.15 மணியளவில் யாழ்.போதனா வைத்தியசாலை முன்றலில் ஆரம்பமாகி இடம்பெற்றது.
யாழ்.போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் ரி. சத்தியமூர்த்தி தலைமையில் இடம்பெற்ற இந்த விழிப்புணர்வு நடைபயணம் ஆஸ்பத்திரி வீதி வழியாக, ஸ்ரான்லி வீதி, கே.கே. எஸ்.வீதி, ஆஸ்பத்திரி வீதி, வேம்படிச் சந்தி வழியாக யாழ். வீரசிங்கம் மண்டபத்தைச் சென்றடைந்ததைத் தொடர்ந்து நீரிழிவு விழிப்புணர்வு நிகழ்வுகளும் இடம்பெற்றன.
இந்த விழிப்புணர்வு நடைபயணத்தில் யாழ்.போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி- ரி. சத்தியமூர்த்தி, சத்திரசிகிச்சை நிபுணர் வைத்தியகலாநிதி எஸ். ரவிராஜ், யாழ்.பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் கே,நந்தகுமாரன், வைத்திய நிபுணர் எஸ். சிவன்சுதன், வைத்திய நிபுணர் வைத்தியகலாநிதி சிவமகாலிங்கம் அரவிந்தன் மற்றும் வைத்தியசாலையின் வைத்தியர்கள், தாதிய உத்தியோகத்தர்கள், ஊழியர்கள்,பொதுமக்கள் என நூற்றுக் கணக்கானோர் கலந்து கொண்டனர்.
அதனைத் தொடர்ந்து யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் நீரிழிவு தொடர்பான விழிப்புணர்வு விசேட நிகழ்வுகள் நடைபெற்றன.

|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106