காங்கேசன் துறைச் சீமெந்துத் தொழிற்சாலையினை மீளப் புனரமைப்பது தொடர்பில் கொழும்பிலிருந்து வருகை தந்த உயரதிகாரிகள் ஆராய்வு!
Friday, November 11th, 2016
காங்கேசன் துறைச் சீமெந்துத் தொழிற்சாலையினை மீளப் புனரமைப்பது தொடர்பில் ஆராய்வதற்காகச் சீமெந்துத் தொழிற்சாலையின் மத்திய செயற்பாட்டு பணிப்பாளர் ஆர்.கே. மகேந்திர சில்வா தலைமையிலான குழுவினர் நேற்று வியாழக்கிழமை(10) கொழும்பிலிருந்து வருகை தந்தனர்.
இந்தக் குழுவினர் தொழிற்சாலையின் தற்போதைய நிலைமைகள் தொடர்பில் ஆராய்ந்தனர். இதன் போது சீமெந்துத் தொழிற்சாலையின் மத்திய செயற்பாட்டுப் பிரதிப் பணிப்பாளர், பிரதிச் செயலாளர், யாழ். மாவட்டச் சீமெந்துக் கூட்டுத்தாபன உயரதிகாரிகள் பலரும் உடனிருந்தனர். தொழிற்சாலையின் தற்போதைய நிலைமைகள் தொடர்பில் ஆராய்ந்து அரசாங்கத்திற்கு முழுமையான அறிக்கையொன்று சமர்ப்பிக்கப்படும் என மேற்படி குழுவினர் தெரிவித்துள்ளனர்.

Related posts:
பிணையாளர் இன்றி இளம் தொழில் முயற்சியாளர்களுக்கு கடன் - மத்திய வங்கி!
பாடசாலை சீருடை: அரசாங்கத்தின் முக்கிய தீர்மானம்!
19 முதல் 25 வயதுக்கு உட்பட்டவர்களிடையே எச்.ஐ.வி தொற்று பாதிப்பு அதிகரித்து - தேசிய எய்ட்ஸ் கட்டுப்ப...
|
|
|


