அத்தியாவசியப் பொருட்கள் சிலவற்றின் விலை குறைப்பு!
Thursday, November 10th, 2016
2017 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தில் அத்தியாவசியப் பொருட்கள் சிலவற்றின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன.
ஒரு கிலோ கிராம் பயறு 15 ரூபாவாலும் நெத்தலி 5 ரூபாவாலும் விலை குறைக்கப்பட்டுள்ளது.ஒரு லீட்டர் மண்ணெண்ணெயின் விலை 5 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன், சமையல் எரிவாயு (கேஸ்) 25 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, ஒரு கிலோ கிராம் வௌ்ளைச் சீனியின் விலை 2 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன், 1 கிலோ கிராம் பருப்பின் விலை 10 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. இம்முறை வரவு செலவுத் திட்டத்தில் ஒரு கிலோ கிராம் உருளைக்கிழங்கு 5 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ள அதேவேளை, 400 கிராம் உள்நாட்டுப் பால்மாவின் விலை 250 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Related posts:
வெளிநாட்டுக் கடன் மறுசீரமைப்பிற்கு சீனா உதவும் – அமைச்சர் அலி சப்ரி நம்பிக்கை!
பிற்போடப்பட்டது உயர்தரப் பரீட்சை - பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அடுத்த வாரத்தில் உத்தியோகப்பூர்வமாக அற...
வாக்காளர்கள் வாக்காளர் அட்டைகளை அணுகுவதற்கு புதிய முறைமை - தேர்தல் ஆணைக்குழு!
|
|
|


