ஹட்டன் கல்வி வலயத்தின் கோட்டம் – 1 க்கான அலுவலக கட்டிடம் திறந்து வைப்பு
Friday, April 8th, 2016
ஹட்டன் பன்மூர் தமிழ் வித்தியாலயத்தின் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள ஹட்டன் கல்வி வலயத்தின் கோட்டம் – 1 க்கான அலுவலக கட்டிடம் இன்று (08.) மத்திய மாகாண விவசாய, கால்நடை அபிவிருத்தி, நீர் விநியோகம், பெருந்தோட்ட உட்கட்டமைப்பு, மீன்பிடி, சுற்றாடல் மற்றும் இந்து கலாச்சார அமைச்சர் ரமேஷ்வரனால் திறந்து வைக்கப்பட்டது.
பிரதம அதிதியாக கலந்து கொண்ட அமைச்சர் ரமேஷ்வரன் பெயர்பலகையை திரைநீ்க்கம் செய்து திறந்து வைப்பதையும் அருகில் மத்திய மாகாண சபை உறுப்பினர்களான கணபதி கனகராஜ், பிலிப்குமார், ஆகியோர் இருப்பதையும் நிகழ்வில் கலந்து கொண்ட அட்டன் வலய கல்வி பணிப்பாளர், கோட்டக் கல்வி பணிப்பாளர், மாகாண கல்வி செயலாளர், மேலதிக கல்வி பணிப்பாளர், பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் சிலரையும் மற்றும் இடம்பெற்ற கலாச்சார நிகழ்வுகளையும் படங்களில் காணலாம்.
Related posts:
நலன்புரி முகாமில் வசிக்கும் மக்களை வெளியேற்றவில்லை யாழ்.மாவட்டச் செயலர் தெரிவிப்பு!
நாட்டில் பிறப்பு வீதத்தை விட கருக்கலைப்பு வீதம் அதிகம்!
வடக்கு மாகாணத்தில் டெங்கு நோய் தொடர்பான முறைப்பாடுகளை மேற்கொள்வதற்கு 24 மணி நேர தொலைபேசி சேவை அறிமுக...
|
|
|


