மேலுமொரு சாதனை ரங்கன ஹேரத் வசமானது!
Thursday, November 10th, 2016
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னணி சூழல் பந்து வீச்சாளரும் , சிம்பாவே தொடரில் இலங்கை அணியை வழிநடத்தும் ஹேரத் இந்த ஆண்டில் அதிகமான டெஸ்ட் விக்கெட்டுக்களை கைப்பற்றிய வீரர்கள் வரிசையில் முதலிடம் பிடித்துள்ளார்.
இந்த ஆண்டில் டெஸ்ட் போட்டிகளில் 7 ஆட்டங்களில் 44 விக்கெட்டுக்களை வீழ்த்திய அஸ்வினை பின்தள்ளி, தனது 8 வது டெஸ்டில் 46 விக்கெட்டுகளை வீழ்த்திய ஹேரத் முதலிடத்தை தனதாக்கினார்.
அத்தோடு டெஸ்ட் விளையாடும் அனைத்து நாட்டு அணிகளுக்கும் எதிராகவும் 5 விக்கெட் பெறுதிகளை கைப்பற்றிய வீரர்கள் வரிசையில் முரளிதரன், டேல் ஸ்டெயின் ஆகியோருக்கு அடுத்து ஹேரத்தும் இணைந்து கொண்டார்.

Related posts:
அருணோதயா மாணவன் நிதுசன் வெள்ளிப் பதக்கத்தை வென்றார்!
இலங்கை அணியின் பரிதாப நிலை குறித்து ஆராய்ந்துபார்க்க வேண்டும் - முத்தையா முரளிதரன்!
Twenty20 - சுப்பர் 8 சுற்றின் முதல் போட்டியில் தென்னாபிரிக்க அணி வெற்றி!
|
|
|


