அரசை எச்சரித்துள்ள தனியார் பேருந்து உரிமையாளர் சங்கம்!

Wednesday, November 9th, 2016

கொழும்பு மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளில் நிலவும் வாகன நெரிசலுக்கு எதிர்வரும் 15ஆம் திகதிக்கு முன்னர் தீர்வு பெற்றுத்தர அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. மேலும் காலை வேளையில் வாகன நெரிசலால் பேருந்து பயணிக்கும் வேகம் மணித்தியாலத்திற்கு 4 கிலோமீற்றர்கள் வரை குறைவடைந்துள்ளதாகவும் கூட்டிக்காட்டியுள்ளது. அத்தோடு அவசர சந்தர்ப்பங்களில் இதனால் பல பிரச்சினைகள் ஏற்படுவதாகவும் குறித்த சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்தார்.

இது குறித்து சில அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ள போதும், எந்தவொரு பதிலும் கிடைக்கவில்லை எனவும் அவர் கூறியுள்ளார். அவ்வாறு தீர்வு பெற்றுத்தராவிடில் வேலை நிறுத்தம் மேற்கொள்ளப்படும் எனவும் தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

private-bus



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106