ஊக்குவிப்பு கொடுப்பனவுடனான தொழிற்பயிற்சி கற்கை நெறிகள்!
Wednesday, November 9th, 2016
இலங்கை தொழிற்பயிற்சி அதிகார சபையானது யாழ்ப்பாண மாவட்டத்தில் தற்கால வேலைவாய்ப்பினை மையமாகக் கொண்டு முழு நேர மற்றும் பகுதிநேர தொழிற்பயிற்சி கற்கைநெறிகளை நடத்தி வருகின்றது. கற்கை நெறிகளுக்கான விண்ணப்பங்கள் கோரப்படுவதோடு இவற்றுக்கான பதிவுகள் தற்போதும் நடைபெற்று வருகின்றன. ஆரம்பிக்கவுள்ள கற்கைநெறிகளான காய்ச்சி இணைப்பவர் (வெல்டிங்), குழாய் பொருத்தனர், அலுமினியப் பொருத்தனர், மரவேலை தொழில்நுட்பவியலாளர், கட்டட நிர்மாண உதவியாளர் ஆகிய கற்கை நெறிகளுக்கு நிபந்தனைக்குட்பட்ட மாதாந்த கொடுப்பனவுகள் வழங்கப்படும்.
இக் கற்கை நெறிகள் கரைநகர், சுன்னாகம், கைதடி மற்றும் ஆனைக்கோட்டை தொழிற்பயிற்சி நிலையங்களில் நடைபெறவுள்ளன. இக் கற்கை நெறிகள் அனைத்தும் தேசிய தொழில் தகைமை (Nஏஞ) சான்றிதழுக்கான பயிற்சிகளாகும். இக் கற்கை நெறிகள் கற்ற விரும்புவர்கள் தங்கள் பதிவுகளை அலுவலக நேரத்தில் மாவட்ட அலுவலகம், 1ஆம் மாடி வீரசிங்க மண்;டபம், இல.12 கே.கே.எஸ் வீதி யாழ்ப்பாணம் அல்லது அந்தத் தொழிற்பயிற்சி நிலையங்களில் எதிர்வரும் 30.11.2016ஆம் திகதிக்கு முன்னர் மேற்கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106