வீதிச் சமிஞ்சைகளுக்கு ஏற்றவாறு பாதசாரிக் கடவைகளை சீரமைக்கும் பணி ஆரம்பம் !
Saturday, November 5th, 2016
யாழ்ப்பாணத்தில் வீதிச் சமிஞ்சைகள் பொருத்தப்பட்டுள்ள பகுதிகளில் பாதசாரிகள் இலகுவாக கடக்கக்கூடியவாறு பாசாரிகள் கடவைகள் அமைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அண்மைக்காலமாக வீதிச் சமிஞ்சைகளுக்கு ஏற்ற வகையில் வீதியைக் கடக்கும் பாதசாரிகள் பல சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர். இதனை நிவர்த்தி செய்யும் வகையிலேயே பாதசாரிக் கடவைகள் திருத்தியமைக்கப்படவுள்ளன.
அண்மையில் வீதிச் சமிஞ்சை பொருத்தப்பட்டுள்ள வேம்படிச் சந்தியில் உள்ள பாதசாரிக் கடவை வீதிச் சமிஞ்சை ஒழுங்குளுக்கு ஏற்றதாக அமையாத காரணத்தால் அப்பகுதியில் பாதசாரிக்கடவையைத் திருத்தியமைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அத்துடன் இனிவரும் காலங்களில் ஏனைய வீதிச்சமிஞ்சை உள்ள வீதிகளிலுள்ள பாதசாரிக்கடவைகளும் திருத்தியமைக்கப்படவுள்ளன. அதன் காரணமாக வீதிச் சமிஞ்சைகளுக்கு ஏற்றவகையில் பாதசாரிகள் வீதியைக் கடக்க முடியும் எனவும், இதனால் வீதி விபத்துக்களை தவிர்க்க முடியும் எனவும் வீதி அபிவிருத்தி அதிகாரசபை வட்டாரங்கள் தெரிவித்தன.

|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106