பால் மாவின் விலை உயர இடமளிக்கப்படாது – நிதி அமைச்சர்!
Friday, November 4th, 2016
வற் வரி அதிகரிப்பின் ஊடாக இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலையை உயர்த்த இடமளிக்கப்படாது என நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
மேலும் வற் வரி அதிகரிப்பினால் இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலை உயர்த்தப்படும் என பால் மா இறக்குமதியாளர்கள் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டிருந்தமைக்கு பதிலளிக்கும் வகையில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அத்தியாவசிய பொருட்களில் ஒன்றாக பட்டியலிடப்பட்டுள்ள பால் மாவின் விலை வற் வரி விதிப்பின் ஊடாக உயர்த்தப்படுவதற்கு இடமளிக்கப்படாது என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts:
அனைத்து அபிவிருத்தி நடவடிக்கைகளையும் துரிதப்படுத்துங்கள் - அனைத்து மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தல...
13 ஐ முழுமையாக நடைமுறைப்படுத்தும் நிலைப்பாட்டை கூட்டமைப்பு நேரடியாக ஜனாதிபதியிடம் முற்படுத்தியுள்ளது...
பிரித்தானிய இளவரசி ஹேன் உத்தியோகப்பூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு இன்று இலங்கை வருகை!
|
|
|


