வீசா வழங்கும் மத்திய நிலையம் இடமாற்றம்!
Friday, November 4th, 2016
கொழும்பில் இயங்கும், பிரித்தானியாவுக்கு செல்வோர் விண்ணப்பங்களை வழங்கும் மற்றும் வீசா பெற்றுக்கொள்ளும் அலுவலகம் புதிய இடத்திற்கு மாற்றம் செய்யப்படவுள்ளது.
தற்போது யூனியன் பிளேசில் இயங்கும் வீசா நிலையம், எதிர்வரும் ஏழாம் திகதி முதல் புதிய இடத்திற்கு மாற்றம் செய்யப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய கொழும்பு 10ல் அமைந்துள்ள இலக்கம் 75 அர்னால்ட் ரத்நாயக்க மாவத்தையிலுள்ள கட்டடத்தொகுதியில் அதன் செயற்பாடுகள் நடைபெறவுள்ளது.புதிய விசா அலுவலகம் வார நாட்களில் காலை 9.00 மணியில் இருந்து பிற்பகல் 2.00 மணி வரை திறந்திருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts:
வடபகுதியில் பயிர்செய் நிலங்களில்வளர்ந்துள்ளபாத்தீனியச் செடிகளால் விவசாயிகளும்,கால்நடைவளர்ப்போரும் பா...
பாடசாலை கல்வித்தவணை எதிர்வரும் 12 ஆம் திகதி ஆரம்பம் - சாதாரண தரப் பரீட்சை மாணவர்களுக்கும் கல்வி அமை...
சுற்றுலாத்துறையில் புதிய மாற்றத்துடன் முன்னோக்கிச் செல்ல எதிர்பார்ப்பு - ஒத்துழைப்போருக்கு உதவிகளை ...
|
|
|


