சாவகச்சேரி வைத்தியசாலையில் பொலிஸ் சாவடி அமைக்குமாறு கோரிக்கை!
Wednesday, November 2nd, 2016
சாவகச்சேரி வைத்தியசாலையின் முன்பகுதியில் பொலிஸ் சாவடியொன்றை அமைக்குமாறு வைத்தியசாலை நிர்வாகத்திடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டது. வைத்தியசாலையின் வைத்திய அதிகாரிகள், பணியாளர்கள் மற்றும் நோயாளர்களே இவ்வாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர். மந்திகை ஆதார வைத்தியசாலை வளாகத்துக்குள் நேற்று நோயாளர் ஒருவர் வாள்வெட்டுக்கு இலக்கான சம்பவத்தையடுத்தே இவ்வாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டது. தற்போது வைத்தியசாலை பொலிஸ் சாவடி வைத்தியசாலையின் பின்பகுதியில் உள்ள கட்டடமொன்றில் இயங்குகின்றது. முன்பகுதியில் சம்பவம் இடம்பெற்ற பின்னரே பொலிஸார் வந்து சேர்கின்றனர்.
கடந்த வாரம் வைத்தியசாலை பணியாளர்கள் வெளியாட்களால் தாக்கப்பட்டுள்ளனர். வைத்தியசாலையின் நோயாளர்கள் பணியாளர்களின் நலன்கருதி உடனடியாக வைத்தியசாலை வளாகத்தின் முன்பகுதியில் பொலிஸ் சாவடி அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது. பொலிஸ் சாவடியை அமைப்பதற்கான இடம் ஏற்கனவே தெரிவு செய்யப்பட்டுள்ளது. கட்டடம் அமைப்பதற்கான நிதி உதவியை, சுகாதார அமைச்சிடமும் வைத்தியசாலை நோயாளர் நலன்புரிச் சங்கத்திடமும் கோரியுள்ளோம் என்று வைத்தியசாலை நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106