கரைதுறைப்பற்று பிரதேசத்திற்கு 809 புதிய மலசலகூடங்கள் தேவை – பிரதேச செயலர் தெரிவிப்பு!

Wednesday, November 2nd, 2016

முல்லைத்தீவு, கரைதுறைப்பற்று பிரதேச செயலர் பிரிவில் 809 குடும்பங்களுக்கு புதிய மலசலகூடங்கள் அமைக்க வேண்டியுள்ளதுடன் 77 சேதமடைந்த மலசலகூடங்கள் புனரமைக்க வேண்டுமென கரைதுறைப்பற்று பிரதேச செயலர் எஸ்.குணபாலன் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் –

;கரைதுறைப்பற்று பிரதேச செயலர் பிரிவின் கீழ் 13ஆயிரத்து 213 வரையான குடும்பங்கள் மீள்குடியேறியுள்ளனர். மீள்குடியேறிய குடும்பங்களின் பல்வேறு தேவைகள் பூர்த்தி செய்ய வேண்டிய தேவை காணப்படுகின்றது. எனினும் 516 புதிய மலசலகூடங்கள் அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளதுடன் சேதமடைந்த 345 மலசலகூடங்களும் புனரமைக்கப்பட்டுள்ளன. மேலும் 809 புதிய மலசலகூடங்களை அமைத்துக் கொடுக்க வேண்டிய தேவை உள்ளதுடன் சேதமடைந்த நிலையில் காணப்படும் 77 மலசலகூடங்களையும் புனரமைக்க வேண்டும். அத்துடன் 170 கிணறுகளும் 25 விவசாயக் கிணறுகளும் புதிதாக அமைத்துக் கொடுக்கப்பட வேண்டியுள்ளதுடன் சேதமடைந்த 131 கிணறுகளும் புனரமைக்க வேண்டும் என்றார்.

thumbs_941691_254554744684066_1727375135_n



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106