வாய்க்காலை புனரமைத்து தருமாறு நல்லூர் தெற்கு பகுதி மக்கள் ஈழமக்கள் ஜனநாயக கட்சியிடம் கோரிக்கை!
Monday, October 31st, 2016
மழைகாலம் நெருங்கியுள்ளதால் தமது பகுதியில் தேங்கி நிற்கும் மழைநீரை வெளியேற்றுவதற்கான மழை நீர் வடிகாலை புனரமைத்து தருமாறு ஈழமக்கள் ஜனநாயக கட்சியிடம் நல்லூர் தெற்கு பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
நல்லூர் கோயில் வீதியில் உள்ள மாதர்சங்க மண்டபத்தில் அதன் தலைவர் திருமதி ஜெயதீசன் தயாழினி தலைமையில் இன்றையதினம் நடைபெற்ற சந்திப்பில் அதிதியாக கலந்துகொண்ட கட்சியின் நல்லூர் பிரதேச நிர்வாக செயலாளர் அம்பலம் இரவீந்திரதாசனிடமே குறித்த கோரிக்கையை அப்பகுதி மக்கள் முன்வைத்துள்ளனர்.
மேலும் தமது பகுதியில் வாழும் அதிகளவான மக்கள் வறியவர்களாக இருப்பதனால் வாழ்வாதாரத்தில் மிகவும் பின்தங்கிய நிலையில் வாழ்ந்துவருவதாகவும் இதனால் தமது வாழ்வாதார நிலைமைகளை மேம்படுத்துவதற்காக சுயதொழில் உதவித்திட்டங்களை பெற்றுத்தருமாறும் கோரிக்கை விடுத்தனர்.
குறித்தபகுதி மக்களது நிலைமைகளை ஆராய்ந்தறிந்தகொண்ட இரவிந்திரதாசன், செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவின் கவனத்திற்கு பிரச்சினைகளை கொண்டு சென்று தீர்வுகளை பெற்றுத்தருவதற்கான முயற்சிகளை மேற்கொள்வதாக தெரிவித்துள்ளார்

|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106