இளைஞர் அபிவிருத்திச் சுட்டியில் இலங்கைக்கு 31ஆவது இடம்!

Monday, October 31st, 2016

2016ஆம் உலகளாவிய இளைஞர் அபிவிருத்திச் சுட்டியில், அதில் அங்கம் வகிக்கும் 183 நாடுகளில் இலங்கை 31ஆவது இடத்தைப் பெற்றுள்ளது.

பொதுநலவாய நாடுகளின் செயலாளர் அலுவலகம் ஊடாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வு முடிவில் வெளியான புள்ளிவிவரத்தில் இது தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் பொதுநலவாய நாடுகளுக்குள் இலங்கை 7ஆவது இடத்தில் உள்ளது.

குறித்த ஆய்வு முடியின்படி, 133ஆவது இடத்தில் இந்தியாவும் 77ஆவது இடத்தில் நேபாளமும் உள்ளது.

2016 ஆம் ஆண்டின் இளைஞர் அபிவிருத்திச் சுட்டியில் முதலிடத்தை ஜேர்மன் பெற்றுள்ளதுடன் இரண்டாவது இடத்துக்கு டென்மார்க் தெரிவாகியுள்ளது. அவுஸ்திரேலியா, 03ஆவது இடத்தில் உள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது. நான்காவது இடத்தை சுவிட்சர்லாந்து பெற்றுள்ளதுடன் பிரித்தானியா 5ஆவது இடத்தில் உள்ளது.

சுகாதாரம், கல்வி, தொழில்வாய்ப்பு, அரசியல் மற்றும் சமூக செயற்பாடுகள் உள்ளிட்ட காரணிகளை கவனத்தில் எடுத்து 15 முதல் 29 வயதான இளைஞர்களிடம் இந்த கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

73702



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106