இம்ரான்கானை முந்தினார் மிஸ்பா உல் ஹக்!

Monday, October 31st, 2016

பாகிஸ்தான் அணிக்கு அதிக டெஸ்ட் போட்டிகளில் தலைமை தாங்கியவர் என்ற சாதனையை, மிஸ்பா உல் ஹக் படைத்துள்ளார். முன்னாள் சகலதுறை வீரரான இம்ரான் கானின் சாதனையை அவர் முறியடித்துள்ளார்.

இதற்கு முன்னர் 48 போட்டிகளில் தலைமை தாங்கியிருந்த மிஸ்பா, நேற்று ஞாயிற்றுக்கிழமை ஆரம்பித்த, மேற்கிந்தியத் தீவுகளுக்கெதிரான போட்டியிலேயே, தனது 49ஆவது போட்டியில் தலைமை தாங்கி, இச்சாதனையைப் படைத்தார்.

இம்ரான் கானின் சாதனையை முறியடித்தமை மட்டுமன்றி, 49 போட்டிகளில் தலைமை தாங்கிய சௌரவ் கங்குலியையும், அவர் சமப்படுத்தினார். இருவரும், அதிக போட்டிகளில் தலைமை தாங்கிய அணித்தலைவர்களின் பட்டியலில், 16ஆவது இடத்தில் உள்ளனர்.

அதிக போட்டிகளில் தலைமை தாங்கியவராக, தென்னாபிரிக்காவின் முன்னாள் அணித்தலைவர் கிறேம் ஸ்மித் காணப்படுகிறார். அவர், 109 போட்டிகளில் தலைமை தாங்கியுள்ளார். தற்போதுள்ள தலைவர்களில், 54 போட்டிகளில் தலைமை தாங்கியுள்ள அலஸ்டெயர் குக்கே, முன்னணியில் காணப்படுகிறார்

 article_1477840555-InMisbah_30102016_GPI



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106