நியூசிலாந்து இலக்கு 270 ஓட்டங்கள்!
Saturday, October 29th, 2016
இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 5வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வருகிறது.
நாணய சுழற்சியில் வென்ற இந்திய அணித்தலைவர் டோனி முதலில் துடுப்பெடுத்தாட முடிவு செய்தார்.இதன் படி தொடக்க வீரர்களாக ரஹானே மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் களமிறங்கினார்கள். ரஹானே 20 ஓட்டங்கள் எடுத்த நிலையில் நீசம் பந்தில் லாதமிடம் பிடி கொடுத்து வெளியேறினார்.
இதன் பின்னர் ரோஹித் சர்மாவுடன் விராட் கோஹ்லி ஜோடி சேர்ந்தார். மெதுவாக ஆட்டத்தை தொடங்கிய ரோஹித் சர்மா அதிரடியாக விளையாடி 49 பந்தில் அரைசதம் அடித்தார்.ரோஹித் சர்மா 70 ஓட்டங்கள் சேர்த்த நிலையில் போல்ட் பந்தில் ஆட்டமிழந்தார். அவர் 65 பந்தில் 5 பவுண்டரி, 3 சிக்சருடன் இந்த ஓட்டங்களை எடுத்தார்.
பிறகு விராட் கோஹ்லியுடன் அணித்தலைவர் டோனி ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி மிகவும் மந்தமாக விளையாடியது.டோனி 59 பந்தில் 41 ஓட்டங்களும், விராட் கோஹ்லி 76 பந்தில் 65 ஓட்டங்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.
மனீஷ் பாண்டே டக்- அவுட்டானார். கடைசி நேரத்தில் அக்சேர் படேல் (24), கெடார் ஜாதவ் (39) ஆகியோர் நிதானமாக ஓட்டங்கள் சேர்க்க, இந்திய அணி 50 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 269 ஓட்டங்கள் சேர்த்தது.நியூசிலாந்து அணி சார்பில், போல்ட், சோதி தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள்.

|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106