ஐரோப்பிய ஒன்றியத்தின் விசேட குழு இலங்கை வரவுள்ளது!
Friday, October 28th, 2016
இலங்கைக்கு ஜீ.எஸ்.பி.வரிச்சலுகையை வழங்குவது ரொடர்பில் ஆராய்வதற்காக ஐரோப்பிய ஒன்றியத்தின் குழுவொன்று இலங்கை வரவுள்ளது.
இந்த குழு எதிர்வரும் 31 ஆம் திகதி இலங்கை வரவுள்ளதுடன், நவம்பர் 3 ஆம் திகதிவரை இலங்கையில் தங்கியிருந்து ஜீ.எஸ்.பி.வரிச்சலுகையை வழங்குவத தொடர்பில் ஆராய்ச்சியை மேற்கொள்ளவுள்ளது.
இலங்கையின் அரசியல் மற்றும் பொருளாதாரத்துறை என்பவற்றை ஆராய்வதுடன், இலங்கைக்கு ஜீ.எஸ்.பி.வரிச்சலுகையை வழங்குவதற்கான சூழ்நிலை நாட்டில் காணப்படுகின்றதா என்பதையும் இக்குழு ஆராயவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts:
நாட்டின் வளர்ச்சி அனைத்து பகுதிகளையும் உள்ளடக்கியதாக மட்டுமே இருக்க முடியும் - ஜனாதிபதி செயலணியின் த...
கொரோனா தொற்றுறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு - இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில...
மக்களை ஏமாற்றும் வர்த்தகர்கள் – அதிரடி சோதனையில் இறங்கியஅதிகாரிகள்!
|
|
|


