மக்களை ஏமாற்றும் வர்த்தகர்கள் – அதிரடி சோதனையில் இறங்கியஅதிகாரிகள்!

Friday, April 14th, 2023

சித்திரைப்புத்தாண்டை முன்னிட்டு நுகர்விற்காக வருகை தரும் மக்களை இலக்குவைத்து பாவனைக்கு உதவாத பொருட்கள் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக நுகர்வோர் அதிகார சபை தெரிவித்துள்ளது.

நுகர்வோர் அதிகார சபை அதிகாரிகள் வர்த்தக நிலையங்களில் மேற்கொண்ட திடீர் சோதனை நடவடிக்கையின் போதே குறித்த விடயம் கண்டறியப்பட்டுள்ளதாக அந்த அதிகார சபை மேலும் தெரிவித்துள்ளது.

இதற்கமைய பாவனைக்குதவாத வெங்காயம், வெள்ளைப்பூண்டு, மற்றும் உருளைக்கிழங்கு ஆகியன இவ்வாறு விற்பனை செய்யப்படுவதாக கண்டறியப்பட்டுள்ளதாக நுகர்வோர் அதிகார சபை அறிவித்துள்ளது.

அத்துடன் முட்டைக்கு 44 ரூபாய் நிர்ணய விலையாக அறிவிக்கப்பட்டுள்ள போதிலும், அதிக விலைக்கு முட்டையை விற்பனை செய்த வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் நுகர்வோர் அதிகார சபை அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106