சவுக்கு காடுகள் தீயில் எரிந்து நாசம்!
Wednesday, April 6th, 2016
வடமராட்சி மணற்காடு பிரதேசத்தில் 4 ஏக்கர் சவுக்கு காடுகள் கடந்த திங்கட்கிழமை (04) மாலை ஏற்பட்ட தீ விபத்தால் அழிவடைந்துள்ளதாக வடமராட்சி கிழக்கு பிரதேச செயலாளர் கே.கனகேஸ்வரன், நேற்று (05) தெரிவித்துள்ளார்.
சவுக்கு காட்டில் ஏற்பட்ட தீயை யாழ்ப்பாணம் மாநகர சபை தீயணைப்பு பிரிவினர், பொலிஸார், இராணுவத்தினர் மற்றும் பொதுமக்கள் இணைந்து அணைத்தமையால் தீ மேலும் பரவாமல் தடுக்கப்பட்டது. பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில் விசமிகள் சிலர் வேண்டுமென்றே தீ வைத்துள்ளதாக தெரியவந்துள்ளது.
சவுக்கு விறகுகள் எடுப்பதற்காக சவுக்கு காடுகளை தீவைத்து எரிக்கும் சம்பவம் அண்மைக்காலமாக வடமராட்சி கிழக்குப் பகுதியில் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
அனைத்து பாடசாலைகளதும் பாடசாலைகளின் முதலாம் தவணைக்கான இரண்டாம் கட்ட கல்வி நடவடிக்கைகள் இன்று ஆரம்பம் ...
ஒகஸ்ட் 3 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் உரையாற்றுகிறார் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க!
அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விற்பனை விலையில் பாரிய பிரச்சினை உள்ளது - முன்னாள் நாடாளுமன்ற உறுப்பி...
|
|
|


