மருந்துகளுக்கான விலை குறைப்பு  பொருத்தப்பாடுடையது அல்ல – நிசாந்த தசநாயக்க!

Tuesday, October 25th, 2016

40 மருந்துகளுக்காக முன்வைக்கப்பட்ட விலை குறைப்பு சிறிதும் பொருத்தப்பாடுடையது அல்ல என இலவச  சுகாதார மக்கள் இயக்கத்தின் ஏற்பாட்டாளர் நிசாந்த தசநாயக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்தார்.தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில், மருந்துகள் தொடர்பான விலைப்பட்டியலில் விலை கூடிய மருந்துகளின் விலைகள் மட்டுமே குறைக்கப்பட்டுள்ளன ஆனால் சாதாரண பாவனைக்கான மருந்துகளின் விலைகள் குறைக்கப்படவில்லை.

இந்த செயற்பாடானது சாதாரணமானவர்களை தவிர்த்து பணம் படைத்தவர்களுக்கே சாதகமாக அமைந்திருக்கிறது. குறித்த யோசனையானது தரமற்ற மருந்துகளை உற்பத்தி செய்ய தூண்டுவதாக தெரிவித்துள்ளார்.

மருந்துகளின் விலைகளை மட்டும் அடிப்படையாக கொண்டு அமையாமல் தரத்தினையும் அடிப்படையாக கொண்டு அமைதல் அவசியம் என சுட்டிக்காட்டினார். மேலும் வசதி படைத்தோரை விட சாதாரண மக்களுக்கும் பயனளிக்கக் கூடியதாகவே இந்த விலைப்பட்டியல் அமைய வேண்டும் என்ற கோரிக்கையையும் நிசாந்த தசநாயக்க முன்வைத்தமை குறிப்பிடத்தக்கது.

625.0.560.320.160.600.053.800.668.160.90 (2)



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106