வடமாகாணப் பாடசாலைகளில் நடாத்தப்படவுள்ள மூன்றாம் தவணைப் பரீட்சைக்குரிய நேர அட்டவணை!
Friday, October 21st, 2016
வடமாகாணக் கல்வித் திணைக்களத்தின் வடமாகாணப் பாடசாலைகளில் நடாத்தப்படவுள்ள மூன்றாம் தவணைப் பரீட்சைக்குரிய நேர அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. மூன்றாம் தவணைப் பரீட்சையில் தரம்- 11 மாணவர்களுக்கான முன்னோடிப் பரீட்சை எதிர்வரும்-24 ஆம் திகதி ஆரம்பமாகி 31 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.
தரம்- 06 தொடக்கம் தரம்-10 வரையான மாணவர்களுக்கான பரீட்சை நவம்பர் மாதம்- 21 ஆம் திகதி முதல் 28 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளதுடன் தரம்-03 தொடக்கம் தரம்-05 வரையான மாணவர்களுக்கான பரீட்சை நவம்பர்-24 ஆம் திகதி தொடக்கம் 28 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. தரம்-10 இற்கான செய்முறைப் பரீட்சை நவம்பர்-08 ஆம் திகதியும், தரம்-09 இற்கான பரீட்சை நவம்பர்-10 ஆம் திகதியும் நடாத்தப்படவுள்ளது.

Related posts:
வாகன விபத்துக்களில் 1700 பேர் பலி
எதிர்வரும் 21 ஆம் திகதிமுதல் பாடசாலைகளின் ஆரம்பப் பிரிவை திறப்பதற்கு தீர்மானம்!
மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் உதவித் தொகையை 5 ஆயிரம் ரூபாவில் இருந்து 7ஆயிரத்து ஐநூறு ரூபாவாக ...
|
|
|


