சங்ககாரா, ஜெயவர்த்தனே ஒரே அணியில்: சூடுபிடிக்கிறது பாகிஸ்தான் சூப்பர் லீக்!
Thursday, October 20th, 2016
ஐபிஎல் கிரிக்கெட் போன்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் சார்பில் பாகிஸ்தான் கிரிக்கெட் லீக் போட்டியை நடத்த தீர்மானித்தள்ளது
குறித்த பொட்டிகள் ஐக்கிய அரபு எமிரேட்சில் அடுத்த ஆண்டு பெப்ரவரி- மார்ச் மாதங்களில் நடைபெறும் போட்டியில், லாகூர், பெஷாவர், கராச்சி உள்ளிட்ட நகரங்களின் பெயரில் 5 அணிகள் களம் இறங்குகின்றன.பாகிஸ்தான் வீரர்கள் மட்டுமின்றி வெஸ்ட் இண்டீஸ், இலங்கை, வங்கதேசம், இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளின் வீரர்களும் பங்கேற்கின்றனர்.
அணிகள்
- பெஷாவர் ஜால்மி
- லாகூர் கோலண்டர்ஸ்
- கராச்சி கிங்ஸ்
- இஸ்லாமாபாத் யுனைடெட்
- குவாட்டா கிளாடியேட்டர்ஸ்
அடுத்த வருடம் நடக்க போகும் இந்த கிரிக்கெட் போட்டிகளின் சிறப்புகள் வருமாறு:
- பெஷாவர் ஜால்மி அணியின் அணித்தலைவராக முதலில் நியமிக்கப்பட்ட அப்ரிடி, அதை தற்போது மேற்கிந்திய தீவுகள் அணியை சேர்ந்த டேரன் சமிக்கு கொடுத்துள்ளார்.
- லாகூர் கோலண்டர்ஸ் அணியில் சோஹில் தன்வீரும், கராச்சி கிங்ஸில் கிரிஸ் கெய்லும் இடம் பெற்றுள்ளனர்.
- இஸ்லாமாபாத் அணியில் ஸ்மித் இடம் பெற்றுள்ளார், டீன் ஜோன்ஸ் இஸ்லாமாபாத் அணிக்கு தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். பிராட் ஹாடின் துணை பயிற்சியாளர் ஆவார்.
- சூதாட்டத்தில் சிக்கிய வீரர்களான சல்மான் பட், முகமது ஆசிப் அந்த அணியினராலும் எடுக்கப்படவில்லை.
- இலங்கை அணி வீரர்களான மஹேல ஜெயவர்த்தனே மற்றும் குமார் சங்ககாரா கராச்சி கிங்ஸ் அணியில் இடம்பெற்றுள்ளனர்.

|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106