இலங்கை விமானங்களிலும் கலக்ஸி நோட்-7 பாவனைக்கு தடை!
Tuesday, October 18th, 2016
விமானப் பயணத்தின்போது பயணிகள் மற்றும் விமானப் பணியாளர்கள் சாம்சங் நிறுவனத்தின் கலக்ஸி நோட்-7 ஸ்மார்ட்ஃபோன்களைக் கொண்டு வர தடை விதிப்பதாக இலங்கை தெரிவித்துள்ளது.
சாம்சங் நிறுவனத்தின் கலக்ஸி நோட்-7 ரக ஸ்மார்ட்ஃபோன்கள் திடீரென தீப்பிடிப்பதாக எழுந்த புகாரையடுத்து விமானங்களில் அதன் பயன்பாட்டுக்குத் தடை விதிக்கப்படுகிறது. முன்னதாக அமெரிக்கா இதுபோன்றதொரு தடை உத்தரவை அந்த நாட்டு விமானங்களுக்கு கடந்த சனிக்கிழமை முதல் அமுலுக்கு வரும் வகையில் விதித்திருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.
சாம்சங் நிறுவனம், கலக்ஸி நோட்-7 ரக ஸ்மார்ட்ஃபோன்களை கடந்த ஆகஸ்ட் மாதம் அறிமுகம் செய்தது. இந்த செல்லிடப்பேசிகளில் பொருத்தியுள்ள பேட்டரிகள் திடீரென வெடித்து தீப்பிடிப்பதாக உலகின் பல்வேறு இடங்களில் புகார் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, 25 இலட்சம் கலக்ஸி நோட்-7 ரக செல்லிடப்பேசிகளைத் திரும்ப பெறுவதாக அறிவித்ததுடன், அதன் தயாரிப்பை முற்றிலும் நிறுத்துவதாக சாம்சங் நிறுவனம் அறிவித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106