4500 சாரதிகளுக்கு எதிராக வீதி விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் வழக்கு பதிவு!
Tuesday, October 18th, 2016
வீதி விதிமுறைகளை மீறியமை தொடர்பில் 4500 சாரதிகளுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நாடு முழுவதிலும் மேற்கொள்ளப்பட்ட குறித்த சுற்றுவளைப்புகளின் போது கடந்த இரண்டு வாரங்களில் மேல் மாகாணத்தில் 480 சாரதிகளுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளதாக போக்குவரத்து பிரிவின் பொலிஸ் பொறுப்பதிகாரி பாலித்த பிரனாந்து தெரிவித்துள்ளார்.
ஜனவரி மாதத்தில் இருந்து இதுவரையான காலத்தில் 4500 பேருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர் வாகன நெரிசலை கட்டுப்படுத்துவதற்காக இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
காலை நேரங்களில் விசேடமாக பாடசாலைகளுக்கு அருகில் வீதி விதிமுறைகளை மீறும் சாரதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு போக்குவரத்து அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts:
நாய்களிடம் இருந்து பரவும் கொடிய நோய்: இலங்கையர்களுக்கு எச்சரிக்கை!
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் முயற்சியால் கண்பார்வை நோயினால் பாதிக்கப்பட்ட 29 பேருக்கு மூக்கக்கண்ணாடி...
கடும் வறட்சி: உலர் உணவுப் பொருட்கள் வழங்குவதற்கு நிதி ஒதுக்கீடு!
|
|
|


