குப்பிளான் குறிஞ்சி குமரன் விளையாட்டுக்கழகம் நடத்திய உதைப்பந்தாட்ட தொடரின் கிண்ணத்தை வென்றது ஹென்றிஸ் !

Monday, October 17th, 2016

வலிகாமம் லீக்கின் அனுமதியுடன் குப்பிளான் குறிஞ்சி குமரன் விளையாட்டுக்கழகம் நடத்தும் வடமாகாண ரீதியிலான அழைக்கப்பட்ட கழகங்களுக்கிடையிலான வடக்கின் வல்லரசன் உதைப்பந்தாட்ட தொடரில் லீக் சுற்றில் அண்மையில் நடைபெற்ற முதல் போட்டியில் பாசையூர் சென்.அன்ரனிஸ் மற்றும் இளவாலை யங்கென்றிஸ் அணிகள் மோதின. ஆட்டத்தின் 2ஆவது நிமிடத்திலேயே அற்புதமான ஒரு கோலைப் போட்டு அசத்தினார் ஹென்றிஸ் வீரன் தனேஸ். மாறாத ஆதிக்கத்துடன் தொடர்ந்த ஆட்டத்தில் அதிரட காட்டிய மது 19வது நிமிடத்தில் ஒரு கோலை போட முதற்பாதியில் 2:0 என ஹென்றிஸ் முன்னிலை வகித்தது. தொடர்ந்து 30வது நிமிடத்தில் தனேஸ் வழங்கிய அருமையான பரிமாற்றத்தினை அற்புதமான கோலாக மாற்றினார் மது.

36வது நிமிடத்தில் ஹென்றிஸ் அணிக்கு கிடைத்த தண்ட உதை வாய்ப்பை கோலாக மாற்றினார் ஹென்றிஸ் கோல் காப்பாளர் அமல்ராஜ். ஆட்டத்தின் 42வது நிமிடத்தில் தவறான பரிமாற்றத்தால் ஓர் கோலை அன்ரனிஸ் அணிக்கு வழங்கியது ஹென்றிஸ். மீண்டும் தனேஸ் 49வது நிமிடத்தில் ஒரு கோலை போட இறுதியில் 5:1 என்ற ரீதியில் ஹென்றிஸ் அணி வெற்றி பெற்றுக்கொண்டது. போட்டியின் ஆட்டநாயகன் மது தெரிவானார்.

Untitled-2 copy



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106