பிலிப் ஹியூஸின் மரணம்: ‘வார்த்தைகளால் பாதிப்பில்லை’!

Saturday, October 15th, 2016

துடுப்பெடுத்தாடிக் கொண்டிருக்கும் போது, தலையில் பந்து பட்டதன் காரணமாக உயிரிழந்த பிலிப் ஹியூஸின் மரணத்துக்கு, அவர் மீதும் அவரது துடுப்பாட்ட ஜோடியான டொம் கூப்பர் மீதும் பிரயோகிக்கப்பட்ட வார்த்தைப் பிரயோகங்கள், தாக்கம் செலுத்தவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

மருத்துவ இறப்பு ஆய்வறிக்கைக்கான விசாரணைகளின் போதே இந்த அறிவிப்பை, சட்டத்தரணி கிறிஸ்டினா ஸ்டேர்ண் தெரிவித்தார். இவரே இவ்விசாரணைகளில், நியூ சௌத் வேல்ஸ் மாநில மருத்துவ இறப்பு ஆய்வறிக்கை விசாரணை அதிகாரிக்கு, உதவி வருபவராவார்.

பிலிப் ஹியூஸ் மீது, “நான் உங்களைக் கொல்லப் போகிறேன்” என, வேகப்பந்து வீச்சாளர் டக் பொலிஞ்சர் தெரிவித்ததாக, தஸ்மேனியாவின் முன்னாள் துடுப்பாட்ட வீரரும் பிலிப் ஹியூஸின் சகோதரரின் சக வீரருமான மத்தியூ டே தெரிவித்ததைத் தொடர்ந்தே, இந்த அறிவிப்பை, கிறிஸ்டினா ஸ்டேர்ண் விடுத்தார்.

அவ்வாறான வார்த்தைப் பிரயோகம் விடுக்கப்படவில்லை என, டக் பொலிஞ்சரும் டொம் கூப்பரும் ஏற்கெனவே மறுத்த நிலையிலேயே, மத்தியூ டே வழங்கிய குற்றச்சாட்டு அமைந்திருந்தது.

ஆனால், கிறிஸ்டினா டேர்ணின் அறிவிப்பின்படி, துடுப்பாட்ட வீரர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட வார்த்தைப் பிரயோகங்கள், எந்த விதத்திலுமே, நிலைமையை மோசமாக்கியிருக்கவில்லை எனக் குறிப்பிட்டது.

article_1476370691-InHughes_13102016_GPI



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106