ஓய்வூதியர்களின் பிரச்சினைகள் தொடர்பான கலந்துரையாடல் நாளை!
Wednesday, October 12th, 2016
கிளிநொச்சி மாவட்டம் கரைச்சி பிரதேச செயலர் பிரிவின் கீழ் விதவைகள், அநாதைகள், ஓய்வூதியம் பெற்றுவரும் ஓய்வூதியர்களின் குறைபாடுகள் தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் பொருட்டு மகளிர் விவகார அமைச்சினால் ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதனடிப்படையில் நாளை வியாழக்கிழமை காலை 8.30 மணிக்கு கிளிநொச்சி கூட்டுறவு மண்டபத்தில் நடைபெறவுள்ள நிகழ்வில் ஓய்வூதியத் திணைக்களத்தினரும் வருகை தரவுள்ளதால் பாதிப்பிற்குள்ளாகிய நிலையிலுள்ள விதவைகள், அநாதைகள், ஒய்வூதியர் அனைவரையும் தவறாது பங்குபற்றி தமக்கான தீர்வை பெற்றுக்கொள்ளுமாறு கரைச்சி பிரதேச செயலாளர் அறிவித்துள்ளார்.

Related posts:
வடமாகாணத்திலுள்ள கடற்தொழில் நீரியல் வளத் துறை மாவட்ட அலுவலகங்களுக்குப் புதிய உதவிப் பணிப்பாளர்கள் நி...
சாரதி சேவை தரம் 3 இல் காணப்படும் வெற்றிடங்களை நிரப்புவதற்கு நடவடிக்கை!
கர்ப்பிணித் தாய்மார்களுக்கு சைனோபார்ம் தடுப்பூசி சிறந்தது – சுகாதார அமைச்சுக்கு மகப்பேற்று மற்றும் ப...
|
|
|


