இரத்தினக்கல் தோண்டியபோது மண்மேடு சரிந்து விழுந்து ஒருவர் உயிரிழப்பு

Wednesday, March 16th, 2016

இரத்தினக்கல் தோண்டிக் கொண்டிருந்த ஒருவர் மண்மேடு சரிந்து விழுந்ததில் நசிந்து மரணமான சம்பவமொன்று ஹல்துமுல்லை பகுதியின் ஊவாதென்ன என்ற இடத்தில் 15.03.2016 அன்று மாலை இடம்பெற்றுள்ளது.

ஊவா தென்னையைச் சேர்ந்த எஸ்.எய்ச்.ஜேமிஸ் என்ற 59 வயது நிரம்பிய 5 பிள்ளைகளின் தந்தையே மரணமானவராவார்.

சரிந்து விழுந்த மண்மேட்டை அகற்றி, மண்மேட்டில் நசிந்த நபரை ஹல்துமுல்லை அரசினர் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போதிலும், அந்நபர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக, மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.உயிரிழந்தவரின் சடலம் ஹல்துமுல்லை அரசினர் மருத்துவமனை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

சட்ட விரோதமான முறையிலேயே இரத்தினக்கல் தோண்டும் போது மேற்படி மரணம் சம்பவித்ததாக பொலிஸ் விசாரனையின் போது தெரியவந்துள்ளது.

ஹல்துமுல்லை பொலிசார் இது தொடர்பான விசாரனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106