கிராமத்துடன் கலந்துரையாடல் வேலைத்திட்டத்தை வலுப்படுத்த 5 தேசிய இணைப்புக்குழுக்கள் – ஜனாதிபதி செயலணியின் தலைவர் பசில் ராஜபக்ஷ!

Saturday, February 13th, 2021

கிராமியப் பிரதேசங்கள் மற்றும் மாவட்ட குழுக்களின் ஊடாக தீர்வுகளைப் பெற முடியாத தேசிய மட்டத்தில் தீர்க்கக்கூடிய அபிவிருத்திப் பிரச்சினைகளுக்காக விரைவில் தீர்வைப் பெற்றுக் கொடுக்க வேண்டுமென பொருளாதார மறுசீரமைப்பு மற்றும் வறுமையொழிப்பிற்கான ஜனாதிபதி செயலணியின் தலைவர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அத்துடன் இந்தத் தேசிய இணைப்புக் குழுக்கள் அந்தந்தத் துறைகள் தொடர்பான அமைச்சுக்களுடன் இணைந்து தீர்மானங்களை மேற்கொள்வது வினைத்திறனாக அமையுமெனவும் செயலணியின் தலைவர் சுட்டிக்காட்டினார்.

மேலும் கொள்கை ரீதியாக தீர்மானம் மேற்கொள்ளும் போது அமைச்சுக்கள் மற்றும் அரச நிறுவனங்களுக்கிடையிலான இணைப்பு வலுப்பெறும். ஜனாதிபதியின் கிராமத்துடன் கலந்துரையாடல் வேலைத்திட்டத்தை மேலும் வலுப்படுத்துவதற்கான கொள்கைக்கமைய, ஐந்து தேசிய இணைப்புக்கள் ஸ்தாபிக்கப்படவுள்ளன.

பிரதேச இணைப்புக்குழுக்களுக்கு மேலதிகாக 5 உபகுழுக்கள் நியமிக்கப்படவுள்ளன. இதன் போது, விவசாயக் குழுவின் தலைமைத்துவத்தை அமைச்சர் சமல் ராஜபக்ஷ வகிப்பார். வாழ்க்கைச் செலவு உப குழுவின் தலைவராக அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா செயற்படுவார். அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உட்கட்டமைப்பு வசதிகள் உபகுழுவின் தலைவராகவும் செயற்படுவார்.

சமூக உட்கட்டமைப்பு வசதிகள் உப குழுவின் தலைவராக அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் நியமிக்கப்படவுள்ளார். பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் சமூக அபிவிருத்திக் குழுவின் தலைவராக அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோன் செயற்படுவார். இந்த உபகுழுக்கள் மாதாந்தம் ஒன்றுகூடிக் கலந்துரையாடும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106