தாயின் கவனயீனத்தால் குழந்தை பரிதாபப் பலி!
தாயின் கவனயீனத்தால் பிறந்து 45 நாட்களான,சிவச்செல்வன் கேசவி என்ற பெண் சிசு மூச்சுத் திணறி உயிரிழந்துள்ளது.
இச்சம்பவம், சனிக்கிழமை மாலை (08) நாவாலி தெற்கு மானிப்பாய் பகுதியில் இடம்பெற்றுள்ளது. குழந்தைக்கு பால் கொடுத்த தாய், ஏணையில் போட்டு விட்டு தனது வேலைகளை கவனித்துள்ளார்.
ஏணையில் போடப்பட்டிருந்த துணி, காற்று காரணமாக பிள்ளையின் முகத்தின் மீது தவறுதலாக வீழ்ந்துள்ளது. வேலைகளை முடித்துவிட்டு வந்த தாய், குழந்தையை தூக்கிய போது குழந்தை அசைவற்று காணப்பட்டுள்ளது.
இதையடுத்து, சிசுவை உடனடியாக யாழ். போதனா வைத்தியசாலைக்கு எடுத்து சென்றபோது, குழந்தை ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் கூறினார்.
![]()
Related posts:
உயர்தரப் பரீட்சை பிற்போடப்பட்டால் பட்டப் படிப்புகளுக்கான வயது வரம்பு மீறப்பட்டு கல்வியில் நீண்டகால ந...
தேர்தல் கடமைகளுக்காக நியமனக்கடிதங்களை பெற்ற அனைத்து உத்தியோகத்தர்களும் பணிக்குச் சமுகமளிக்க வேண்டும்...
இன்றும் சுழற்சி முறையில் மின்சார விநியோகத் தடை - அமுல்படுத்துவது தொடர்பான தீர்மானம் அறிவிக்கப்பட்டுள...
|
|
|


