இம்முறை யாழ்.மாவட்டத்தில் 2000 ஹெக்ரெயரில் வெங்காயச் செய்கை!
Monday, October 10th, 2016
யாழ். மாவட்டத்தில் இம்முறை 2ஆயிரத்து 100 ஹெக்ரெயர் நிலப்பரப்பில் காலபோக வெங்காயச் செய்கை மேற்கொள்ளப்படவுள்ளதுடன் எதிர்வரும் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் இந்தச் செய்கை ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் மாகாணப் பிரதி விவசாயப் பணிப்பாளர் செல்வராசா தெரிவித்துள்ளார்.
கடந்த சிறுபோகத்தில் 2ஆயிரத்து 150 ஹெக்ரெயர் நிலப்பரப்பில் வெங்காயச் செய்கை மேற்கொள்ளப்பட்டது என்று மாகாணப் பிரதி விவசாயப் பணிப்பாளர் அ.செல்வராசா தெரிவித்தார். சிறுபோகத்தின் போது பயிரிட்ட வெங்காயச் செய்கை மூலம் விவசாயிகள் அதிக விளைச்சலைப் பெற்றனர். அறுவடைச் செய்யப்பட்ட வெங்காயம் கூடுதலாகச் சந்தைக்கு வந்து சேர்ந்தால் அவற்றின் விலையும் குறைந்தே காணப்பட்டது.

Related posts:
யாழ். நகரிலுள்ள உணவகங்கள் மற்றும் பழக் கடைகள் போன்றவற்றின் மீது மாநகர சுகாதாரப் பிரிவினர் திடீர்ச் ச...
16 - 19 வயதுக்கிடைப்பட்ட ஒரு மில்லியனுக்கும் அதிகமான மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது - ச...
கடன் மறுசீரமைப்பு திட்டம் ஆய்வு செய்யப்படுகிறது – அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவிப்பு!
|
|
|


