விஞ்ஞான பீட ஆசிரியர்களின் நியமனத்தில் குறைபாடுகள்!
Monday, October 10th, 2016
விஞ்ஞான பீட ஆசிரியர்கள் 3500 பேருக்கு வழங்கப்பட்டுள்ள நியமனக் கடிதங்களில் குறைபாடுகள் இருப்பதாக இலங்கை ஆசிரியர்கள் சங்கம் கூறியுள்ளது.
குறித்த ஆசிரியர்களுக்கு உரிய சம்பள அளவு அந்த நியமனக் கடிதங்களில் தவறாகக் குறிப்பிடப்பட்டிருப்பதாக அந்த சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் கூறியுள்ளார்.
அத்துடன் கடந்த ஆண்டும், விஞ்ஞான பீட ஆசிரியர்களுக்கான நியமனக் கடிதங்கள் வழங்கும் போது கல்வியமைச்சின் அதிகாரிகள் இவ்வாறு கவனக் குறைவாக இருந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். குறித்த நியமனக் கடிதங்களில் குறிப்பிடப்பட்டுள்ள சம்பள அளவை திருத்துவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு கல்வியமைச்சின் செயலாளரிடம் கேட்டுக் கொண்டுள்ளதாக ஜோசப் ஸ்டாலின் மேலும் கூறினார்.

Related posts:
தனியார் பஸ் உரிமையாளர்களும் வேலை நிறுத்தம்?
நகைத்திருட்டுடன் தொடர்புடைய இருவர் கைது!
உதய நகர் கிழக்கில் சிறார்கள் கசிப்பு விற்பனை - பாதுகாத்து தருமாறு மக்கள் கோரிக்கை!
|
|
|


